உடைந்து கிடக்கும் பாலூட்டும் அறையின் இருக்கை

Update: 2025-09-14 17:45 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளின் பசியாற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இரும்பிலான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு இருக்கையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தினர் சரி செய்யாமல் உடைந்த இடத்தில் சிமெண்டு கல் வைத்துள்ளனர். தாய்மார்கள் யாேரனும் தெரியாமல் ஒருபுறமாக உட்கார்ந்தால் அந்த இருக்கை உடைந்து விழுந்து விடும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் அல்லது புதிய இருக்கை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராஜரத்தினம், வேலூர்.

மேலும் செய்திகள்