வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு மீனவர் தெருவில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி மூலம் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஆழ்துளை கிணறு தண்ணீர் தொட்டியும், மின்சாரப்பெட்டியும் பழுதடைந்துள்ளன. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் சரி செய்து கொடுக்காமல் உள்ளனர். இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-அருண்குமார், சமூக ஆர்வலர், வந்தவாசி.