சீரமைக்கப்பட்ட சாலை அறிவிப்பு பலகை

Update: 2022-07-23 10:01 GMT

சீரமைக்கப்பட்ட சாலை அறிவிப்பு பலகை

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் செல்லும் எல்.கே.சி.நகர் 2-வது வீதியில் அந்த வீதியை அறிவிக்கும் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்து. இந்த பெயர் பலகை சேதம் அடைந்து கீழே விழுந்து நீ்ண்ட காலமாக சரிசெய்யப்படாமல் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதிக்கு வருபவர்கள் அறிவிப்பு வழிப்பலகை இல்லாததால் சிரமத்திற்கு ஆளானார்கள். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதை அறிந்த அதிகாரிகள் தினந்தந்தி செய்தி வெளியானவுடன் அடுத்த நாளே அப்பணியை மேற்கொண்டு அறிவிப்பு பலகையை சரி செய்தனர். எனவே எங்கள் பகுதி மக்கள் சார்பாக தினந்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

பி.மணி, 2வீதி எல்.கே.சி.நகர்,வெள்ளக்கோவில் 9442649587 

மேலும் செய்திகள்