அணைக்கட்டு தாலுகா பொய்கை கிராமத்தில் வாரச் சந்தை உள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டக்கூடிய அந்த வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் அவதிப்படுகிறார்கள். வாரச்சந்தையில் அடிப்படை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்முருகன், பொய்கை.