அடிப்படைவசதிகள் தேவை

Update: 2022-09-05 11:15 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகிநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் அங்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய், தெரு மின்விளக்குகள், குடிநீர் ஆகிய வசதிகள் இல்லை. இரவில் தெரு இருட்டாக உள்ளது. அங்குள்ள மின் கம்பங்களில் பல்புகள் இல்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்