கலவை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் நினைவஞ்சலி, காது குத்துதல், பிறந்தநாள், திருமணம் மற்றும் அரசியல்வாதிகளின் பிறந்தநாள், கோவில் திருவிழா, அரசியல் பிரமுகர்களை வரவேற்பது போன்ற நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பஸ் நிலையம் அருகே விளம்பர பேனர்களை வைக்கின்றனர். அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது பேனர் விழுந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், கலவை.