ஆம்பூரில் உள்ள அனைத்துப் பெட்ரோல் பங்குகள் இரவில் இயங்காமல் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. 24 மணிநேரமும் பெட்ரோல் பங்குகள் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வருகின்றனர். ஆனால் இரவில் அனைத்துப் பெட்ரோல் பங்குகளிலும் அதன் உரிமையாளர்கள் விற்பனையை நிறுத்தி வைக்கின்றனர். இரவில் அவசரத்துக்குக் கூட 100 மில்லி பெட்ரோல் கிடைப்பதில்லை. அனைத்துப் பெட்ரோல் பங்க் நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல், டீசல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
-ச.வினோத், ஆட்டோடிரைவர். ஆம்பூர்.