ஆரணி பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகில் பெரியார் மாளிகை மேல்மாடி பகுதியில் உள்ள கடைகளுக்கு வாடகை பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பெரும்பாலான கடைகள் வாடகை செலுத்த முடியாததால் மூடப்பட்டன. இதனால் இந்தப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மது அருந்துவது, சீட்டு விளையாடுவது போன்ற சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்குள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி மற்றும் நடவடிக்கைஎடுத்த அதிகாரிகளை பொதுமக்கள், வியாபாரிகள் பாராட்டினர்.