போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களம்பூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்ததால் களம்பூர் பேரூராட்சி அருகே அரிசி ஆலையில் அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டது. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். அங்கு குழந்தைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்குமா?
-சஞ்சீவ்குமார், களம்பூர்.