நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள வாரச்சந்தை அருகே செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் சிறு வயது குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கட்டிடத்தின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்பு பழுதடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. குழந்தைகள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.