ஆம்புலன்ஸ் வசதி தேவை

Update: 2023-08-13 11:45 GMT

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதனால் மழையூர் கூட்டுச்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் சிக்கியவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேறு ஊருக்கு செல்ல போதிய வாகன வசதி இல்லை. எனவே பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-விஜயகுமார், மழையூர். 

மேலும் செய்திகள்