அணைக்கட்டு தாலுகா மராட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒருசிலர் அவசர சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு கூடுதல் மருத்துவர், நர்சுகளை பணியில் அமர்த்த மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமர், மராட்டிபாளையம்.