அரக்கோணம்-திருத்தணி, காஞ்சீபுரம்-சோளிங்கர் ஆகிய பிரதான சாலைகளில் சென்டர் மீடியன் முற்றிலும் தெரியாத வகையில் அழிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபலிப்பான்களை புதுப்பித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சீனிவாசன். அரக்கோணம்.