வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து அப்துல்லாபுரம் வரை சாலையின் இருபக்கமும் ஏராளமான மீன், இறைச்சிக்கடைகள் உள்ளன. அதன் பெயர் பலகையை வியாபாரிகள் சாலையோரம் வைக்கின்றனர். அந்த வழியாக இரு வாகனங்கள் மாறி செல்லும்போது ஒதுங்க முடியாமல் விபத்துகள் நடக்கின்றன. கடைகளின் பெயர் பலகையை சாலையோரம் வைப்பதை ரோந்து போலீசார் தடை செய்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
-துரைராஜ், தூசி.