பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2025-08-03 17:20 GMT

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கட்டிடம் புதிதாக ஆரணி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. பள்ளி முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. எனவே இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நலன் கருதி உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

-கோவிந்தராஜ், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்