வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-07-12 20:14 GMT
  • whatsapp icon

  நெகமம்-தாராபுரம் சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் உடுமலை, தாராபுரம், பெரியபட்டி, தளி, பொள்ளாச்சி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி, திருப்பூர் பஸ்கள் மற்றும் கிராம பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் திரும்பும் வழியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெகமம்-தாராபுரம் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே 2 இடத்தில் வேகத்தடை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்