பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஆம்பூரில் இருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன் மேற்கூரையின் மீது அரசமர கன்று வளர்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உறுதி தன்மை இழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிழற்கூடத்தை பராமரித்துக் கட்டிடத்தின் மீது வளர்ந்துள்ள அரச மரத்தை அகற்ற வேண்டும்.
-பாபு, அணைக்கட்டு.