ஆம்பூர் பஸ் நிலையத்தில் பெங்களூரு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தில் மேற்கூரை இல்லை. வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், குழந்தைகள் கடும் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டி உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் மேற்கூரை வசதி செய்து தர வேண்டும்.
-நிஹார்அஹமத், ஆம்பூர்.