வேலூரை அடுத்த ஊசூரில் ஆரம்ப சுகாதார நிலையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளி மற்றும் வங்கிகள் எனப் பொதுமக்கள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். தினமும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்வதால், அவசர நேரத்தில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிக்க இடம் தேடி அலைகின்றனர். எனவே பெண்கள் மற்றும் மாணவிகளின் நலம் கருதி ஊசூரில் பொதுச் சுகாதார வளாகம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எல்.ராஜேஷ்குமார், ஊசூர்.