திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ரெயில் நிலையம் செல்லும் சாலையை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ரெயில்வே நிர்வாகத்தால் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தனது விளம்பர பேனரை வைத்து, ரெயில்வே பெயர் பலகையை மறைத்துள்ளதால், வெளியூர் பயணிகள் ரெயில் நிலையம் செல்லும் வழியை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பேனரை அகற்ற வேண்டும்.
-ரஞ்சித்குமார், போளூர்.