வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் இந்திரா நகரில் பயணிகள் நிழற்கூடம் கட்டிக்கொடுத்தால் மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். தற்போது நிழற்கூடம் இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிலர் சாலையோரம் அமர்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்திராநகரில் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தருவார்களா?
-கா.பவானி, இந்திராநகர், வந்தவாசி.