திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தத்தில் ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அங்கு இரவில் சமூக விரோதிகள் சிலர் மதுபானங்களை குடித்து விட்டு அசுத்தம் செய்கிறார்கள். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். பகல் நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் கால்களை கண்ணாடி பீங்கான் பதம் பார்க்கின்றன. மேலும் சிலர் குடித்து விட்டு போதையில் அங்கேயே படுத்துத் தூங்குகிறார்கள். ரோந்துப்பணியில் ஈடுபடும் போலீசார் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சம்பந்தமூர்த்தி, திருப்பத்தூர்.