அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

Update: 2025-07-06 19:17 GMT

ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ஆம்பூர் நகருக்குள் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் சென்னை, வேலூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றால், மேம்பாலத்தின் மீது ஏறி ஆம்பூரை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் தேவையில்லாமல் சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து சான்றோர்குப்பம் அருகே ‘யூ-டர்ன்’ அடித்து திரும்பி வரும் நிலை உள்ளது. அந்தத் திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆம்பூர் நகருக்குள் வரும் இடத்தில் உரிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆம்பூர். 

மேலும் செய்திகள்