சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் பெரியமலை செல்லும் வழியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பக்கம், பக்கவாட்டு சுவர்கள் என முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. சேதமடைந்த பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-தரணிதரன், சோளிங்கர்.