புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்

Update: 2025-01-12 20:10 GMT

போளூர் தாலுகா களம்பூர் முஸ்லிம் தொடக்கப்பள்ளிக்கு அருகில் சேதம் அடைந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. ஆனால் இன்னும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்படவில்லை. தற்போது உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போதிய வசதி இல்லை. இதனால், குழந்தைகள் சரியாக வருவது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட வேண்டும்.

-ஆரிப், போளூர்.

மேலும் செய்திகள்