பொதுமக்களை குழப்பும் பெயர்பலகை

Update: 2022-09-20 10:51 GMT



திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மீனாட்சி மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது புதிய கலெக்டர் அலுவலக 5-வது மாடிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் மீனாட்சி பள்ளியில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் என்ற பெயர் பலகை மாற்றப்படாமல் அங்கேயே உள்ளது. இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எங்கு உள்ளது என்று ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே மகளிர் பள்ளி வளாகத்தில் உள்ள பெயர் பலகையை அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்