பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

Update: 2022-09-10 12:46 GMT

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம்பள்ளிப்பட்டு கிராமம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் நலன் கருதி பொதுச் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-குருநாதன், அகரம்பள்ளிப்பட்டு.

மேலும் செய்திகள்