அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம்

Update: 2022-08-26 11:31 GMT

திருவண்ணாமலை பே-கோபுரத் தெருவில் உள்ள செங்கம் சாலைக்கு செல்லும் வழியில் பிள்ளை குளம் உள்ளது. இந்தக் குளம் குப்பைகள் நிறைந்து பாசி படர்ந்து அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் இந்தக் குளத்தின் படிகளில் அமர்ந்து சிலர் மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இந்தக் குளம் கிரிவலப்பாதையில் உள்ளது. அதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி பகுதியில் இருந்து கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் இந்தக் குளத்தைக் கண்டு வேதனை அடைகின்றனர். எனவே இந்தக் குளத்தை மாவட்ட நிர்வாகம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருணாசலம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்