சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருளம்பாடியில் உள்ள வாய்க்காலின் குறுக்கே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பணை முழுமையாக உடையும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க தடுப்பணையை சீரமைக்க வேண்டியது அவசியம்.