100 நாள் வேலை வழங்க கோரிக்கை

Update: 2024-06-09 12:11 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி ஊராட்சி மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளிகள் ஆவர். இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்