திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், பஸ்கள் உள்ளிட்டவற்றில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். அதிகாரிகள், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல் பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை கடைக்காரர்கள், பஸ் கண்டக்டர்கள் வாங்குகிறார்கள். ஆனால் திண்டுக்கல்லில் மட்டும் வாங்க மறுக்கிறார்கள். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.