விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் தாயில்பட்டி அருகே மடத்துப்பட்டியில் உள்ள ரேசன் கடை கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சத்துடனே வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்பாக சேதமடைந்த ரேசன் கடையை அகற்றி விட்டு புதிய கடை கட்டித்தர வேண்டும்.