நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அனைத்து வாகனங்களும் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே குறுகிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் வர வேண்டும். இந்த நிலையில் நீண்ட காலமாக பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலம் கட்டிட தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருவாரூர்