அங்கன்வாடி மைய கட்டிடம் செயல்படுமா?

Update: 2022-08-21 13:09 GMT

அங்கன்வாடி மைய கட்டிடம் செயல்படுமா?

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சியில், மேலத்தெரு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் புனரமைப்பிற்காக கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சிமெண்டு கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்தநிலையில் அங்கன்வாடி மையம் இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய சத்துணவு பொருட்கள் ஏதும் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையம் கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சங்கர்,அடியக்கமங்கலம்,

மேலும் செய்திகள்