அந்தியூர் பிரம்மதேசம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள தரைப்பாலம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த பாலத்தை கடந்துதான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்கள். பாலத்தில் தவறி விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த தரைப்பாலத்தை புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.