சாயும் நிலையில் மரம்

Update: 2022-08-16 15:01 GMT

ஈரோடு சம்பத்நகரில் பஸ் நிறுத்தம் அருகே பெரிய புங்க மரம் உள்ளது. இந்த மரத்தின் கீழ் பகுதி முழுவதும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலையில் உள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த மரத்தின் இலைகள் விழுவதால் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி வருவதால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை