சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-15 12:37 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் தற்போது சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே சேதமடைந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்