திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் இருந்து பஞ்சப்பூர் செல்லும் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதயடைந்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து போதுமான தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.