தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-28 17:44 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் பனமங்கலத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்களை பார்த்து குரைத்து அச்சுறுத்தி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்