திருவாரூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், ரெயில்நிலையம், கமலாலய குளம் போன்ற இடங்களில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டி கடித்து விடுகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்