தெரு விளக்கு வசதி வேண்டும்

Update: 2022-08-08 13:25 GMT
திருவாரூர் புலிவலம் கிராமத்தில் எஸ்.எம்.ஏ. நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருள் சூழ்ந்து கிடப்பதால் சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்