பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒதியம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் மழைநீர் செல்வதற்கு வசதியாக புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கால்வாயில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.