சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் விலக்கு பகுதியில் சாலையில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. சாலையின் குறுக்கே மாடுகள் திடீரென செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.