வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-01 13:26 GMT
கூத்தாநல்லூர் அருகே உச்சுவாடியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்கள் உள்ளன. இந்த வயல்களில் அதிகளவில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக அதன் அருகிலேயே வடிகால் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் வயலில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் வயலில் தேங்கியுள்ளது. இதனால் அந்த விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்