குளச்சல் ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில்விளையில் உப்புக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில் குளத்துக்கு செல்ல வேண்டிய தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவார்களா?.
-ரா.ரகு, கோவில்விளை