ஸ்மார்ட் சிட்டி திட்டதின் கீழ் தஞ்சை பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இதையொட்டி பஸ் நிலைய நுழைவு வாயிலில் மின்விளக்கால் பெயர்பலகை அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு இரவு நேரத்தில் ஒளிர்வது பஸ் நிலையத்துக்கு வருபவர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக பழைய பஸ் நிலைய பெயர்பலகையில் "ம்" என்ற வார்த்தையில் விளக்கு ஒளிராமல் உள்ளது. இதனால் பயணிகள், மற்றும் பொதுமக்கள் ஒளிராத பெயர்பலகையை பார்த்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பஸ் நிலைய பெயர் பலகை விளக்கு மீண்டும் முழுமையாக ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?