மதுப்பிரியர்களால் மாணவிகள் அச்சம்

Update: 2022-07-30 14:36 GMT

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மாணவ- மாணவிகள் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளதால் இங்கு வந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். மேலும் மதுப்பிரியர்களால் இப்பகுதியில் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனை கருதி அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்