பூட்டி கிடக்கும் கழிவறை

Update: 2022-07-27 12:46 GMT

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என சுகாதார மையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுகாதார மையம் பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது. இதனால் அவசர தேவைக்கு கூட கழிவறையை பயன்படுத்த முடியாமல் பெண்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். மேலும் மையத்தை சுற்றி குப்பைகள் சூழ்ந்து காணப்படுகின்றது. எனவே கழிவறையை சுத்தப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்