ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-07-26 14:58 GMT

செங்கோட்டை தாலுகா கணக்கபிள்ளைவலசை பஞ்சாயத்து 3-வது வார்டில் பழைய நீர்த்தேக்க தொட்டி உள்ளது. பயன்பாட்டில் இல்லாத அந்த தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதன் அருகில் தான் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதனால் குழந்தைகள் அந்த தண்ணீர் தொட்டிக்கு அருகில் நின்று விளையாடுகிறார்கள். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக, அந்த ஆபத்தான நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்