மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்காபுரம் ஊராட்சி ஈரோடு-முத்தூர் ரோட்டில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக பெயர் பலகைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெயர்த்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி வழி மாறி செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே பெயர்த்து எடுத்த வழிகாட்டி பலகைகளை மீண்டும் நெடுஞ்சாலை ஓரம் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.